மாணவ மன்ற தொடக்க விழா'24


மாணவர் மன்றம் என்பது மாணவர்களை            கல்லூரி நிர்வாகத்துடனும்                                          ஆசிரியர்களுடனும்  இணைக்கும் ஒரு பாலம்      ஆகும்.


மாணவர்களின் திறமையை              வெளிக்கொண்டு வருவதற்கும், அவர்களின் நிறை குறைகளையும் ,தேவைகளையும் நிர்வாகத்திற்கு  எடுத்துறைப்பதற்கும்  மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் குரலாக ஒலிப்பது மாணவர் மன்றம்.


எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் மன்ற உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்கினார்கள்.






    மாணவ மன்ற செயலாளர்கள் (2023 - 2024)


   கல்லூரி நிர்வாகத்தின் முன்னிலையில் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாணவர் மன்றத்தின் திறப்பு விழா 18-05-2024    (சனிக்கிழமை) அன்று எங்கள் கல்லூரி கலையரங்கில் இனிதே நடைப்பெற்றது. 

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எங்கள் மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் Dr.K.சாந்தா அருள்மொழி அவர்கள்,

மருத்துவ கண்காணிப்பாளர்  Dr.குணசேரன் அவர்கள்,

துணை முதல்வர் Dr.குமுதா அவர்கள், மற்றும் அனைத்து துறை தலைவர்களும்  வருகை தந்து மேடைக்கு அழகு சேர்த்து விழாவை சிறப்பித்தனர்.


தாய்த்தமிழை வணங்கி விழா தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவிகளான கவிநேத்ரா, செல்வப்பிரியா, ஸ்ரீ வர்சினி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.



தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்ப் பண்பாட்டை குறிக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் குத்து விளக்கு ஏற்றி விழாவிற்கு ஒளி சேர்த்தனர்.




 

குத்து விளக்கு ஏற்றதல்

விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து விருந்தினர்களையும் முன்னாள் மாணவர் மன்ற உறுப்பினர்கள் கௌரவித்தனர்.





மேலும் எங்கள் கல்லூரியில் பயலும் இரண்டாம் ஆண்டு மாணவி நிகிதா எங்கள் கல்லூரி முதல்வர் அவர்களின் படத்தை தத்தரூபமாக வரைந்து அவருக்கு அன்பளிப்பாக கொடுத்து கௌரவித்தார்.



 

ஒரு நிகழ்ச்சியை துவங்கி வைப்பது வரவேற்புரை!!

இவ்வழகிய உரையை அழகாகவும், பண்பாகவும்,எங்களது கல்லூரி    மாணவர் அன்பழகன் (மூன்றாம் ஆண்டு- வகுப்பின் பிரதிநிதி)  தலைமை விருந்தினர் ஆன எங்கள் கல்லூரி முதல்வர் Dr.K.சாந்தா அருள்மொழி அவர்களையும்  மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும், வரவேற்றார்.


நமது கல்லூரியில் நடைப்பெற்ற பற்பல 
அழகிய நிகழ்வுகள், மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வெற்றிகள் என பல்வேறு தருணங்களை ஒன்று இணைத்து,
அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில்,      (2023-2024) கான கல்லூரி இதழான சாகித்திய சாரல் (வருட இதழ்) வெளியிடப்பட்டது.




கல்லூரி இதழ் வெளியீடு(2023-2024)

மாணவ மன்ற'24 - பதவியேற்பு

மாணவ மன்றம் என்பது மாணவர்களால் மாணவர்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு  பிரதிநிதிகள் குழு.

இதில் பல்வேறு துறைகளுக்கான மாணவ பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவ மன்றக் குழு பேராசிரியர்களின் மேற்பார்வையில் முறையான தேர்தல்கள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.








              நடப்பு ஆண்டின் மாணவ மன்ற                                         பிரதிநிதிகள்



புதிய மாணவ மன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற பின் புதிய மாணவ மன்றத்தின் தலைவரான சக்திபாலா தலைமையுரை வழங்கினார்..


தலைமை செயலாளர்- சக்தி பாலா

துருவம் பெயர் வெளியிடு

               எங்கள் கல்லூரியில் பயலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்களை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தும் விதமாக "துருவம்" என பெயர் சூட்டியுள்ளனர்.
 
          துருவம் - முடிவில்லா  (eternal,long-lasting)
என்று பொருள்

        எல்லையற்ற மருத்துவ சேவையை இந்த மானுடத்திற்கு வழங்கவேண்டும் என்பதை குறிக்கும் விதமாக இந்த பெயரை சூட்டியுள்ளனர்.

   தங்களுடைய பெயரை இந்த புதிய மாணவ மன்ற தொடக்க விழாவில், கல்லூரி முதல்வர் தலைமையில்,அனைவரின் முன்னிலையில் வெளியிட்டனர்.





இந்த பெயரின் பொருளையும் அதை  வைத்ததன்  நோக்கத்தையும் அனைவருக்கும் எடுத்துரைக்கும் விதமாக ஒரு உரையை வழங்கினார் முதலாம் ஆண்டு மாணவி மோகன சௌந்தரி.


துருவம்( 2023- 2029)
 
நன்றியுரை

                       இந்த நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடத்த வழிகாட்டிய பேராசிரியர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறும் விதமாக நன்றியுரை வழங்கினார்
எங்கள் கல்லூரியில் பயலும் மூன்றாம் ஆண்டு மாணவர் சந்தோஷ்.



 நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் குழு
                
            இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடைப்பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் 
 
                      வித்யஸ்ரீ, சாஜித்தா, மஹிலியா மோகன்,நிரஞ்சனா 


நிகழ்ச்சி தொகுப்பாளினிகள்
 
இறுதியாக நாட்டுப்பண் உடன் இனிதாக நிறைவடைந்தது நிகழ்ச்சி.


                                                    - தமிழ் மன்றம் குழு

                                                      சந்தோஷ்
                                                      சுபரஞ்சினி
                                                      மோகன சௌந்தரி




















  












 












 






       

Comments

Popular posts from this blog

Esperanza '24

Organ donation day

Thimil ‘24